மும்பையில் இருந்து பாதயாத்திரையில் அயோத்திக்கு வந்த இஸ்லாமிய பெண்!
By : Sushmitha
கடந்த ஜனவரி 22 ஆம் தேதியில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா உடன் திறக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு நாளும் அயோத்தி ராமர் கோவிலில் பாலராமரை சந்திப்பதற்கு ராம பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்துக்கொண்டே வருகின்றனர். கடும் பணியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணியிலிருந்து பாலராமரை சந்திப்பதற்கு பக்தர்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இஸ்லாமிய பெண் ஷப்னம் ஷேக் என்ற மும்பையை சேர்ந்தவர் பாதயாத்திரையில் அயோத்தியை அடைந்து அங்கு ஹனுமன் கர்ஹி கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டார்.
மேலும் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், நான் வேறு எந்த நாட்டில் வாழ்ந்திருந்து இந்த யாத்திரையை மேற்கொண்டு இருந்தாலும் எனக்கு இந்த பயணம் மிகவும் சவாலாக இருந்திருக்கும் ஆனால் இந்த பயணம் எனக்கு சவாலாக இல்லை! அதே சமயத்தில் நான் இந்தியாவில் வசிக்கிறேன் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநில அரசாங்கமும் காவல்துறையும் எனக்கு உதவி மற்றும் ஆதரவுகளை கொடுத்தனர் என்று ஷப்னம் சேக் தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar