பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட உளி ஓவியங்கள் புத்தகம்! மகிழ்ச்சியில் ஓவியர் ரத்ன பாஸ்கர்!
By : Sushmitha
கடந்த 19ஆம் தேதி கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருந்தார். அப்பொழுது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமரை வரவேற்கும் விதமாக அவருக்கு உளி ஓவியங்கள் என்ற புத்தகத்தை பரிசளித்தார். அந்தப் புத்தகமானது கோட்டோவியங்கள் அடங்கிய நூல், இதனை மதுரை வில்லாபுரம் சேர்ந்த ஓவியர் ரத்ன பாஸ்கர் உருவாக்கியுள்ளார்.
பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட புத்தகம் தன்னுடைய புத்தகம் என்பதை அறிந்த ரத்ன பாஸ்கர் அந்த புத்தகத்தை பற்றி தெரிவித்துள்ளார், ஏழாயிரம் பண்ணை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தனக்கு ஓவியம் மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும் இதற்குப் பிறகு கல்லூரியிலும் பல ஓவிய ஆசிரியர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள் என்று கூறினார். மேலும், அப்பொழுது ஒரு முறை குற்றாலத்தில் நான் வரைந்த ஓவியத்தை பார்த்த என் அப்பாவின் நண்பர் என்னை மதுரையைச் சேர்ந்த ஓவியர் சௌந்தரபாண்டியனிடம் வேலைக்கு சேர்த்துவிட்டார் பிறகு அவரிடமே பல ஓவியக்கலைகளை கற்றுக் கொண்டேன். அவரிடம் புகைப்படக் கலையில் கற்றுத் தேர்ந்தேன்.
இந்த நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் சிற்பங்களின் கருவூலமாக திகழ்கின்ற புது மண்டபத்தில் உள்ள சிற்பங்களை கோட்டோவியமாக வரைந்து புத்தகமாக ஆவணப்படுத்தினார். அதேபோன்று நானும் செய்ய வேண்டும் என்று முயற்சித்து 2015 முதல் கோட்டோவியமாக கணினி மூலம் பல சிற்பங்களை வரைய தொடங்கினேன். அப்படி 180 கோட்டோவியங்களை வரைந்து 8 ஆண்டுகளின் கடின உழைப்பிலே உளி ஓவியங்கள் என்ற தலைப்பில் 60 சிற்பங்களின் நேர்பார்வை, இடப்பார்வை, வலப்பார்வை என முப்பரிமான பார்வையில் வரைந்த கோட்டோவியங்களை நூலாக்கினேன். இந்த நூலில் பிரதமருக்கு பரிசாக வழங்கியுள்ளனர் இதன் மூலம் மதுரையின் பெருமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று ஓவிய ரத்தின பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Source : The Hindu Tamil thisai