தேர்தல் குறித்த முக்கிய நடவடிக்கை பற்றிய ஆலோசனை! தமிழகத்திற்கு வரும் ஜே.பி. நட்டா!
By : Sushmitha
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மூன்று மாதங்களே உள்ள நிலையில் மூன்றாவது முறையாகவும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரத்தில் பாஜக களப்பணிகளை தீயாக இறங்கி பார்த்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இந்த முறை குறிப்பிடத்தக்க தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக தேசிய தலைமையிலிருந்து தமிழக மாநில பாஜகவிற்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு தமிழகத்தின் பாஜகவின் செல்வாக்கும் தற்போது உயர்ந்து வருகிறது, அதே சமயத்தில் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அடிக்கடி தமிழகத்திற்கு வருகை புரிந்தும் வருகின்றனர். அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டு முறை தமிழகத்திற்கு வருகை புரிந்து விட்டார், எனினும் மீண்டும் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் பிப்ரவரி 11-ம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளதாகவும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மத்திய அமைச்சர் வேல்முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜே பி நட்டா சென்னைக்கு வரும் பொழுது சென்னையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Source : Asianetnews Tamil