Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து விரோத போக்கை திமுக எப்பொழுது நிறுத்தும்! குற்றம் சாடிய எச். ராஜா!

இந்து விரோத போக்கை திமுக எப்பொழுது நிறுத்தும்! குற்றம் சாடிய எச். ராஜா!

SushmithaBy : Sushmitha

  |  5 Feb 2024 1:52 AM GMT

பாஜக முன்னால் தேசிய தலைவர் எச். ராஜா திருச்சி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் தமிழக காவல்துறை பாரபட்ச செயல்பாடுகளையும் அத்துமீறல் நடவடிக்கைகளையும் அதிகமாக செய்து வருகிறது பாஜகவினரை குறிவைத்து தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து வருகிறது. 30 ஆண்டுகள் பழமையான கோவிலை இடித்து சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை அமைத்துள்ளனர் இப்படி ஆளும் திமுக அரசு இந்து மத விரோத அரசாங்க செயல்படும் போக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்!

என். ஐ. ஏ. துப்பாக்கி, வெடிபொருட்கள் வைத்திருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்துள்ளது ஆனால் தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது! திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் ஆளுநர் பதவி தேவையா என்று கூறுகிறார்கள் ஆனால் இதுவே அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் ஆளுநர் மாளிகையின் வாசலில் இருப்பார்கள். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள் அவருக்கு இது சோதனை காலகட்டம் தேர்தலுக்குப் பிறகு அவரது நிலை புரியவரும் என்றும் கூறியுள்ளார்.

Source : Asianetnews Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News