அபுதாபியில் எழுப்பியுள்ள இந்து கோவில்! பிரதமர் மோடி திறப்பு!
By : Sushmitha
இந்திய நாட்டிலே ராமருக்கான மிகப்பெரிய ஆலயம் அயோத்தியில் கட்டப்பட்டதும் அங்குள்ள பாலராமரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் அயோத்திக்கு சென்று வருவதும் பரபரப்பாக செய்திகளில் வெளியாகி வரும் நிலையில் ஐக்கிய அமீரக எமிரேட்டில் அயோத்தி கோயிலை விட மிகப் பிரம்மாண்டமாக மிகப்பெரிய அளவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2019 ஆம் ஆண்டு ஐக்கிய அமீரக எமிரேட்சின் அபுதாபி மற்றும் துபாயை இணைக்கும் சாலையில் மிகப் பிரமாண்டமான இந்து கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த கோவிலை கட்டுவதற்காக கிட்டத்தட்ட 55 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட இடத்தை அபுதாபியில் பட்டத்தில் அரசர் முஹம்மத் சயீத் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் இக்கோயில் கட்டுவதற்கு தேவையான பளிங்கு கற்கள் இளஞ்சிவப்பு கற்கள் மற்றும் சில கட்டுமான பொருட்கள் என அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோவில் நிர்வாகம் சார்பாக பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதனை அடுத்து 888 கோடி ரூபாய் செலவில் அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
Source : Dinamalar