Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜகவிற்கு சாதகமான தேர்தல்! வெளியானது இந்தியா டுடே கருத்துக்கணிப்பின் முடிவுகள்!

பாஜகவிற்கு சாதகமான தேர்தல்! வெளியானது இந்தியா டுடே கருத்துக்கணிப்பின் முடிவுகள்!

SushmithaBy : Sushmitha

  |  9 Feb 2024 1:33 AM GMT

கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வரை மூட் ஆப் தி நேஷனல் என்ற தலைப்பில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரியவந்துள்ளது. அதாவது, உத்திரபிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ள நிலையில் அதில் 70 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் ஒரு தொகுதியையும் பெரும் என்று கூறப்படுகிறது. மேலும் மேற்கு வங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 தொகுதியையும், பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 32 தொகுதியையும் இண்டியா கூட்டணி 8 தொகுதிகளை பெறும் என கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, அசாம் ஹரியானா உத்தரகாண்ட் ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மொத்த தொகுதிகளின் பெரும்பான்மையை தேசிய ஜனநாயகக் கூட்டணியை பெரும் என்று கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News