மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்! நிதி பங்கீடு பற்றி புட்டு புட்டு வைத்த நிதி அமைச்சர்!
By : Sushmitha
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் நேற்று பிப்ரவர் 8 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது குறித்தும் 2004 முதல் 14 வரையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நிதி பங்கீடு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.
ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த அறிக்கையில், 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு தலைமையிலான கூட்டணி அரசு 10 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை மந்தமாகியுள்ளது. ஆனால் 2014ல் பிரதமர் மோடி பதவி ஏற்றும் போது பொருளாதாரம் பலவீனத்தை சந்தித்துக் கொண்டிருந்தது வார கடன்களால் வங்கிகளும் பலவீனமாக இருந்தது! மன்மோகன் சிங் அரசு காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியதோடு காமன்வெல்த் போட்டியிலும் பெரிய ஊழலை நடத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அந்த காலகட்டத்தில் முதலீடுகள் குறைந்து டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் மோசமான நிலையில் இருந்தது.
இப்படி அந்நிய குறைந்த அளவில் கையிருப்பு, தவறான பொருளாதார நிர்வாகம், நிதி ஒழுங்காற்று தன்மை என அனைத்தையும் நாங்கள் மாற்றி பொருளாதாரத்தை படிப்படியாக மீட்டு சீரான வரிசையில் கொண்டு வந்து தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி உள்ளதோடு வளர்ச்சி பாதையிலும் கொண்டு வந்துள்ளோம் என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், தமிழகத்திற்கான நிதி உதவி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 5,924. 42 கோடி மட்டுமே ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இதே தொகை 300 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 2 லட்சத்து 30 ஆயிரத்து 893 கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளோம். வரி பகிர்வுகளும் காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு 94 ஆயிரத்து 977 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் 192 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 2,77,444 கோடி ரூபாய் வரி பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Source : Dinamalar