விலகியது தூக்கு கயிறு! மத்திய அரசின் தலையிட்டால் தாயகம் திரும்பிய கடற்படையினர்!
By : Sushmitha
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் எட்டு பேர் கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை அடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசே நேரடியாக தலையிட்டு கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கடந்த டிசம்பர் மாதம் வழக்கை விசாரித்ததில் கத்தார் நீதிமன்றம் தூக்கு தண்டனையை சிறை தண்டனையாக மாற்றி குறைத்தது இருப்பினும் மத்திய அரசு இதில் தனது முயற்சியை கைவிடாமல் இருந்து வந்ததால் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி 8 பேரும் சிறை தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட பல மாதங்களுக்குப் பிறகு இன்று காலையில் இந்தியா அடைந்த இவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டு ஒரு வழியாக தாயகம் திரும்பியதில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீடு இல்லாமல் எங்களின் விடுதலை சாத்தியமாக இருக்காது எனவே அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் கத்தார் நாட்டின் எமீர் ஷேக் தமிம் பின் அகமத் அல் தானிக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கடற்கரை வீரர் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி அளித்துள்ளார்.
Source : The Hindu Tamil thisai