Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸின் அடுத்த இரண்டு விக்கெட் காலி! பாஜகவில் இணைந்த இரு மூத்த காங்கிரஸ் தலைவர்கள்!

காங்கிரஸின் அடுத்த இரண்டு விக்கெட் காலி! பாஜகவில் இணைந்த இரு மூத்த காங்கிரஸ் தலைவர்கள்!

SushmithaBy : Sushmitha

  |  14 Feb 2024 1:45 AM GMT

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவார் பாஜகவே இணைந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான அசோக் சவான் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஆவார். அதோடு காங்கிரஸின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து மகாராஷ்டிராவில் இரண்டு முறை முதல்வராகவும் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் மேலும் தற்பொழுது காங்கிரசின் எம்எல்ஏவாக உள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸிலிருந்து நேற்று அசோக் சவான் விலகியதோடு இன்று மாநிலத்தின் துணை முதல்வரான தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதோடு இவருடன் காங்கிரஸின் முன்னாள் எம்எல்சி அமர் ராஜூரும் பாஜகவில் இணைந்தார்.

ஏற்கனவே இண்டி கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது காங்கிரஸின் மூத்த தலைவர்களாக இருந்த இருவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது காங்கிரஸ்ஸிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News