Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக வேட்பாளர்கள் பட்டியல்! விரைவில்! திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர்!

பாஜக வேட்பாளர்கள் பட்டியல்! விரைவில்! திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர்!

SushmithaBy : Sushmitha

  |  15 Feb 2024 1:07 AM GMT

2024 லோக்சபா தேர்தலுக்கான பணிகள் அனைத்தையும் ஒவ்வொரு கட்சியும் முழு வீச்சுடன் செய்து வருகிறது. அதன்படி கூட்டணி குறித்த ஆலோசனைகளையும் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைகளையும் நடத்தி வரும் செய்திகள் தற்போது வெளி வருகின்ற நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட நடைபயணத்தின் இறுதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்றும் திருப்பூர் பல்லடத்தில் வருகின்ற 25ஆம் தேதி விழா நடைபெறுவதாகவும் அதற்கான ஏற்பாடு பணிகளின் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதோடு தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலையும் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வருகின்ற 17, 18 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள பாஜக தேசிய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அந்தக் கூட்டத்திலே வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனைகள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அதன் அறிவிப்புகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News