Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளின் நஷ்டத்தை தமிழக அரசே ஈடு செய்ய வேண்டும் - அண்ணாமலை கண்டனம்!

விவசாயிகளின் நஷ்டத்தை தமிழக அரசே ஈடு செய்ய வேண்டும் - அண்ணாமலை கண்டனம்!
X

SushmithaBy : Sushmitha

  |  15 Feb 2024 12:09 PM GMT

கர்நாடக மாநிலம் தமிழகத்தின் விவசாயத்திற்காக காவிரி ஆற்றில் இருந்து பாசன நீதி திறப்பதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. மழை இல்லாத காலங்களில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதும் அதற்கு தமிழகத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு காவிரி நதிநீர் பங்கிட்டு வழக்கில் இறுதி தீர்ப்பின்படியும் கர்நாடகா அரசு கடந்த ஆகஸ்ட் முதல் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காமல் இருந்ததால் மீண்டும் இந்த பிரச்சனை வெடித்தது. இந்த நிலையில், காவிரி நீர் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் பெறும் இழப்பை சந்தித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில். காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40% குறைந்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே இதற்குக் காரணம். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ, எந்தக் கவலையும் இன்றி, சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காமல், தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடனேயே, போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறந்து விட மறுத்து வந்தது. அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய திமுக அதற்காக எந்தக் குரலையும் எழுப்பவில்லை.

இன்று, டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, இந்த இரண்டு மாநில திமுக காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு. போதிய மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்ட ஈட்டை, தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News