தமிழக ஃபேக்ட் செக்கிற்கு செக் வைத்த அண்ணாமலை!
By : Sushmitha
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் சட்டசபையில் ஆளுநருக்காக தமிழக அரசு தயாரிக்கப்பட்ட உரைகள் இருந்த பொய்களை எடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பொழுது மத்திய அரசின் சில திட்டங்களை பாஜக தனக்கு சாதகமாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று கூறி மத்திய அரசு 2021 இல் கொண்டு வந்த திட்டத்தில் விபத்தில் யாரேனும் மாட்டிக் கொண்டிருந்தால் அவர்களை மருத்துவமனை அழைத்துச் சென்றால் சிறந்த குடிமகன் என்ற பெயரில் அவர்களுக்கு 5000 ரூபாய் மத்திய அரசு கொடுக்கும் ஆனால் திமுக இதற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றம் சாடி இருந்தார். இதனை தமிழ்நாட்டின் ஃபேக்டர் செக் அண்ணாமலை கூறியது வேறு தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டம் வேறு என்று மேற்கோள் காட்டி பதிவிட்டு இருந்தது.
அதோடு மாநிலத் தலைவர் அண்ணாமலை இதனை மறுக்கும் வகையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், நேற்று ஆளுநர் உரையில் பத்துப் பொய்களை அம்பலப்படுத்திய பிறகு, தமிழக அரசின் உண்மைச் சோதனைப் பிரிவில் இருந்து இன்னொரு பொய் வந்துள்ளது.
நல்ல சமற்கிருதத் திட்டம் திமுக அரசின் யோசனை அல்ல என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஆனால் இது டிசம்பர் 2021 இல் “இன்னுயிர் காப்போம் திட்டத்தின்” ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது—கீழே உள்ள கட்டுரைக்கான இணைப்பு என ஒரு நாளிதழிலின் இணைப்பை பதிவிட்டிருந்தார். அதில் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் நபருக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று இன்னுயிர் காப்போம் திட்டத்தின் ஒரு அம்சமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, உங்கள் உரிமைகோரலின் பிற கூறுகளை நான் கூறுகிறேன். மத்திய அரசின் PMJAY திட்டம் மற்றும் மோட்டார் வாகன விபத்து நிதியின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் இது ஜூலை 2020 இல் மாநில அரசுகளின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது - கீழே உள்ள இணைப்பு என மற்றுமொரு செய்தி இணைப்பையும் இணைத்து பதிவிட்டு அதில் மத்திய அரசு 2020இல் அறிமுகப்படுத்திய பி எம் ஜே ஏ ஒய் திட்டத்தின் சிறப்பு அம்சமாக 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதும் இடம் பெற்று இருந்தது.
இறுதியாக, PMJAY இன் கீழ், தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து ₹1694 கோடிகளைப் பெற்றுள்ளது. TN Fact Check பிரிவு முரசொலியைத் தாண்டி உலகின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம்! என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.