Kathir News
Begin typing your search above and press return to search.

மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட பாஜகவினர் - வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் கண்டனம்!

மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட பாஜகவினர் - வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் கண்டனம்!
X

SushmithaBy : Sushmitha

  |  15 Feb 2024 12:10 PM GMT

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வண்டியூர் டோல்கேட் பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த செய்தி மதுரை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தமிழக பாஜக, மதுரை மாவட்ட OBC அணியை சேர்ந்த திரு.சக்திவேல் அவர்களை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வண்டியூர் டோல் கேட் அருகே வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடந்து வந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் குற்றசெயல்கள் தொடர்ச்சியாக நடப்பதும் அத்தகைய அராஜகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் தமிழக மக்களுக்கு இந்த திராவிட மாடல் விடியா அரசு கொடுத்த அன்பு பரிசு. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எது வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டும் வளர்ச்சியடைந்துள்ளன.

தமிழகத்தில் பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் திமுக எனும் திராவிட மாடலின் சித்தாந்தமா? எப்போது விடியல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர். இப்படி தொடர் அராஜகத்தை செய்து வரும் இந்த விடியா அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் முருகன் இது குறித்த கண்டனத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News