Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக இரண்டு நாள் தேசிய குழுக்கூட்டம் இன்று தொடக்கம்! தேர்தல் யுக்திகள் குறித்த ஆலோசனை!

பாஜக இரண்டு நாள் தேசிய குழுக்கூட்டம் இன்று தொடக்கம்! தேர்தல் யுக்திகள் குறித்த ஆலோசனை!

SushmithaBy : Sushmitha

  |  18 Feb 2024 1:27 AM GMT

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. மேலும் தலைமை தேர்தல் கமிஷனும் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதோடு பல கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களில் ஈடுபட்டும் வேட்பாளர்கள் பட்டியலையும் தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று பாஜகவின் தேசிய குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அங்குள்ள பாரத் மண்டபத்தில் இந்த கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அதோடு பாஜக தேசிய குழு கூட்டத்தின் முன்னிட்டு பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சிகள் மாநாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பெறுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கருத்துக்கணிப்பு ஆய்வுகள், தேர்தல் யுக்திகள் ஆகியவையும் இந்த இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News