கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் எங்களது கோபம் நிச்சயம் இந்த தேர்தலில் எதிரொலிக்கும் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எச்சரிக்கை!
By : Sushmitha
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், உயர் கல்விக்கான ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் மீண்டும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இவர்கள் கடந்த பத்தாம் தேதியே மாவட்ட அளவிலான வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடுகளை நடத்தியது அப்போது ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து முதல்வர் பேசியிருந்தார், மேலும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை பெற்றதன் அடிப்படையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.
இந்த செயல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் தங்கள் குமுறல்களை பதிவிட வைத்துள்ளது. அதாவது அதிமுக திமுகவை விட குறைவான 2 லட்சம் ஓட்டுகளை பெற்ற காரணத்தினாலே 43 தொகுதிகளை இழந்ததாகவும் 75 இடங்களை வென்ற அதிமுகவிற்கு இந்த 43 தொகுதியும் கிடைத்திருந்தால் ஆட்சியை அதிமுக பிடித்து இருக்கும், அப்படி இந்த 43 தொகுதிகளிலும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகளே திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம்! இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருந்தால் சரி இல்லை என்றால் இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோபம் நிச்சயம் எதிரொளிக்கும் என்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் குமுறலை பதிவிட்டு வருகின்றனர்.
Source : Dinamalar