Kathir News
Begin typing your search above and press return to search.

பணியிலே வெட்டி கொலை செய்யப்பட்ட விஏஓ மகன் சிவீல் நீதிபதியாக தேர்வு - அண்ணாமலை பாராட்டு!

பணியிலே வெட்டி கொலை செய்யப்பட்ட விஏஓ மகன் சிவீல் நீதிபதியாக தேர்வு - அண்ணாமலை பாராட்டு!

SushmithaBy : Sushmitha

  |  19 Feb 2024 2:51 AM GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் விஏஓ வாக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை தடுப்பதில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து மணல் கொள்ளையை தடுத்ததால் அவரது அலுவலகத்திலேயே மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த செய்தி தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து என்ற இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் அதிரடியாக உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், பணியில் இருக்கும் பொழுதே வெட்டிக்கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மகன் மார்ஷல் ஏசுவடியான் சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக தனது அலுவலகத்திலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் அமரர் லூர்து பிரான்சிஸ் சேவியர் அவர்கள் மகன், சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், சிவில் நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், தனது தந்தை கொலை செய்யப்பட்ட கடினமான நேரத்திலும், அவரது கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்து, தனது பெரும் முயற்சியால் தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது, தந்தை மீது அவர் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாகவும், இளைஞர்கள் அனைவருக்கும் மாபெரும் உத்வேகமாகவும், அமைந்திருக்கிறது.

சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள் பணிகள் சிறக்கவும், நீதித்துறையில் அவர் மென்மேலும் பல உயரங்களை எட்டவும், தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News