கரும்பு கொள்முதலின் விலை ஏற்றம்.... விவசாயிகளின் நலனே நோக்கம் - பிரதமர் நரேந்திர மோடி!
By : Sushmitha
குஜராத்தில் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார்.
அதாவது, விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது ஏனென்றால் இன்று அமுல் நிறுவனம் கால்நடை வளர்ப்பின் அடையாளமாக மாறிவிட்டது. சுதந்திரம் அடைந்த நாட்டில் பல பால் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன ஆனால் அமுல் நிறுவனத்தை போன்று யாரும் கால்நடை பராமரிப்பவர்களின் அடையாளமாக மாறவில்லை!
விவசாயிகளின் நலனுக்காக காங்கிரஸ் ஆட்சியில் எந்த திட்டமும் உருவாக்கப்படவில்லை, ஆனால் விவசாயிகளின் நலனே எங்களது முக்கிய நோக்கம் 50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் கிராமங்களில் நடபட்ட சில மரக்கன்றுகள் பெரிய ஆலமரமாக மாறி அந்த மரத்தின் கிளைகள் அனைத்தும் தற்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது என்று பேசினார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள நமது விவசாய சகோதர சகோதரிகளின் நலன் தொடர்பான ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இந்நிலையில், கரும்பு கொள்முதல் விலையில் வரலாற்று சிறப்புமிக்க உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் நமது கரும்பு உற்பத்தி செய்யும் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Source : Dinamalar