Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டமன்றத்தில் பொய் கூறும் அமைச்சர்... முறையிடச் சென்ற விவசாயிகள் கைது! விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக!

சட்டமன்றத்தில் பொய் கூறும் அமைச்சர்... முறையிடச் சென்ற விவசாயிகள் கைது! விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக!
X

SushmithaBy : Sushmitha

  |  23 Feb 2024 2:10 PM GMT

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட்டை விரிவாக்கம் செய்ய 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலர் போராடினர், அரசுக்கு எதிராக விவசாயிகள் போராடியதால் அவர்களை குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்தது. இதற்கு அடுத்து விவசாயிகள் மற்றும் மற்ற கட்சியினர் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து போராடியதை அடுத்து தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தவர்களை விடுவித்தது.

மேலும் விவசாயிகள் தங்கள் நிலங்களை காப்பாற்ற 200 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டமன்றத்தில் பேசும் பொழுது "போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிலம் இல்லை என்றும் அவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள்" என்றும் கூறியது விவசாயிகளை கோபப்படுத்தியது. இதை எடுத்து விவசாயிகள் "போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிலம் இருக்கிறது என்ற ஆதாரத்தை காண்பித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவாரா?" என்ற கண்டனங்களையும் விமர்சனங்களையும் கோபமாக முன் வைத்தனர். இதனை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும் முதலமைச்சரின் நேரில் சந்தித்த முறையிட சென்ற விவசாயிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததோடு விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், விவசாயிகளைக் கொச்சையாகப் பேசி அவமானப்படுத்திய அமைச்சரைக் கண்டிக்கத் திராணி இல்லாமல், தங்கள் நிலங்களைக் காக்கப் போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடுவதும், அவர்களைச் சந்திக்க மறுத்துக் கைது செய்வதுமான, விவசாயிகளுக்கெதிரான பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உடனடியாக, கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், அவர்கள் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்றும் தமிழக சார்பாக வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News