Kathir News
Begin typing your search above and press return to search.

தேசம் மற்றும் தெய்வீக பணிகள் இரண்டும் முக்கியம்.. பிரதமர் மோடி கூற காரணம் என்ன.?

தேசம் மற்றும் தெய்வீக பணிகள் இரண்டும் முக்கியம்.. பிரதமர் மோடி கூற காரணம் என்ன.?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Feb 2024 3:49 AM GMT

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான இணையதள இணைப்பு, ரயில், சாலை, கல்வி, சுகாதாரம், இணைப்பு, ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 22ஆம் தேதி, அயோத்தியில் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டா விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததை நினைவு கூர்ந்தார். இந்தியாவிற்கும் உலகிற்கும் வாலிநாத் ஷிவ் தாம் ஒரு புனித யாத்திரைத் தலம் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆனால் ரேவாரி சமூகத்திற்கும் நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கும் இது குருவின் புனித இடமாகும் என்றும் கூறினார்.


தெய்வீகப் பணிகள் மற்றும் 'தேசப் பணிகள்' ஆகிய இரண்டும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தற்போதைய தருணத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். "ஒருபுறம், இந்தப் புனிதமான நிகழ்வு நடந்துள்ளது, மறுபுறம் ரூ .13,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார். ரயில், சாலை, துறைமுகம், போக்குவரத்து, தண்ணீர், பாதுகாப்பு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் சுற்றுலா திட்டங்கள் வாழ்க்கையை எளிதாக்கும். இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.


புனிதமான மெஹ்சானாவில் தெய்வீக சக்தி இருப்பதை குறிப்பிட்ட பிரதமர், பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் மகாதேவுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த ஆன்மீக உணர்வுடன் மக்களை இது இணைக்கிறது என்று கூறினார். இந்த சக்தி, கதிபதி மஹந்த் வீரம்-கிரி பாபுவின் பயணத்துடன் மக்களை இணைக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். கதிபதி மஹந்த் பல்தேவகிரி பாபுவின் தீர்மானத்தை முன்னெடுத்துச் சென்று அதை நிறைவேற்றியதற்காக மஹந்த் ஜெயராம்கிரி பாபுவுக்கு பிரதமர் தலை வணங்கினார். பல்தேவகிரி பாபுவுடன் தமக்கு இருந்த 40 ஆண்டு கால ஆழமான தொடர்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஆன்மீக உணர்வை ஊட்டுவதாக அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அவரை தமது இல்லத்திற்கு பல சந்தர்ப்பங்களில் வரவேற்றதை நினைவு கூர்ந்தார். 2021 ஆம் ஆண்டில் அவரது மறைவை நினைவு கூர்ந்த பிரதமர், அவரது முக்திக்குப் பிறகு அவரது ஆத்மா இன்று அனைவருக்கும் ஆசி வழங்குகிறது என்று கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News