Kathir News
Begin typing your search above and press return to search.

ஆவணக் காப்பக துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா - ஓமன் முடிவு!

ஆவண காப்பகத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் கூட்டாக முடிவு செய்துள்ளன.

ஆவணக் காப்பக துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா - ஓமன் முடிவு!
X

KarthigaBy : Karthiga

  |  26 Feb 2024 6:30 PM IST

ஆவண காப்பகங்களின் தலைமை இயக்குனர் அருண் சிங்கல் துணை இயக்குனர் சஞ்சய் கார்க் மற்றும் ஆவணக் காப்பு செயல்பாட்டாளர் பாத்திமா ஆகியோர் அடங்கிய தேசிய ஆவண காப்பகத்தின் பிரதிநிதிகள் குழு 2024 பிப்ரவரி 21 மற்றும் 22 தேதிகளில் ஓமனின் தேசிய பதிவுகள் மற்றும் ஆவண காப்ப ஆணையத்திற்கு பயணம் செய்தனர். ஆவணங்கள் சுவடிகள் காப்பகத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்த பயணத்தின் நோக்கம் ஆகும் .மின்னணு பதிவுகள் மற்றும் ஆவண முகாமைத்துவ முறைமைகள் பிரிவு ,மைக்ரோஃபிலிம் பிரிவு, தனியார் பதிவு பிரிவு, பதிவுத்துறைக்கான அணுக்கள் மின்னணு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட ஓமன் ஆவண காப்பகத்தின் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பாளர்கள் இந்திய தூது குழுவினருக்கு பிரத்தியேக விளக்கங்களை வழங்கினார் .


ஏ.ஏ.வின் தலைவர் ஹமாம் முகமது தவ்யாணியுடன் ஆவனக் காப்பு துறையில் இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் குறித்து அருண் சிங்கால் பேசினார். இந்தியாவில் ஓமன் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் இருப்பது குறித்து அந்நாட்டு ஆவண காப்பகத்தின் தலைவரிடம் அவர் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட வரைவு திட்டத்தில் இடம்பெற்றுள்ள சில நடவடிக்கைகள் பின்வருமாறு :-


இரண்டு ஆவண காப்பகங்களில் இருந்தும் தொகுக்கப்பட்ட ஆவண காப்பக பொருள்களின் அடிப்படையில் ஒரு கூட்டு கண்காட்சியை ஏற்பாடு செய்வதுடன் இந்தியாவுக்கு ஓமனுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை எடுத்துரைக்கும் ஒரு மாநாட்டையும் ஏற்பாடு செய்தல், இரண்டு சேகரிப்புகளையும் பலப்படுத்த பரஸ்பர ஆர்வமுள்ள ஆவணங்களின் டிஜிட்டல் தகவல்களை பரிமாறிக் கொள்வது இரு நிறுவனங்களின் சிறந்த நடைமுறைகள் குறித்த அறிவை பகிர்ந்து கொள்வதற்காக டிஜிட்டல் மையமாக்கள் மற்றும் பாதுகாத்தல் துறைகளில் உள்ள நிபுணர்களை உள்ளடக்கிய பரிமாற்றத் திட்டத்திற்கான கட்டமைப்பை எளிதாக்குதல்.


இரண்டு ஆவண காப்பகங்களில் இருந்தும் தொகுக்கப்பட்ட ஆவண காப்பக பொருள்களின் அடிப்படையில் ஒரு கூட்டு வெளியீட்டை கொண்டு வருதல். ஓமனின் பல்வேறு பகுதிகளில் பல தலைமைகளாக வசித்து வரும் இந்திய வம்சாவளியினருடனும் இந்திய பிரதிநிதிகள் கலந்துரையாடினர். அவர்கள் வசம் உள்ள முக்கிய ஆவணங்களை காப்பதில் அக்கறை செலுத்துமாறு வெளிநாடு இந்தியர்களை தேசிய ஆவண காப்பக தலைமை இயக்குனர் ஊக்குவித்தார்.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News