மோசமான வரலாற்றை கொண்ட பாகிஸ்தான் இந்தியாவைப் பற்றி பேசுவது விபரீதமானது - இந்திய தூதர் அனுபமா சிங்
By : Sushmitha
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் 55வது கூட்டம் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் காஷ்மீர் விகாரத்தை எழுப்பி உள்ளது அதற்கு இந்தியாவின் நிரந்தர தூதர் அனுபமா சிங் தனது பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, பாகிஸ்தானின் இந்தியாவைப் பற்றிய விரிவான குறிப்புகளை பொருத்தவரையில் இந்த சட்டசபை மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது இது மிகவும் துரதிஷ்டவசமானது! 2023 ஆண்டில் ஜாரன்வாலா நகரில் 19 தேவாலயங்களும் இடிக்கப்பட்டது 89 கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டு தனது சொந்த நாட்டு சிறுபான்மையின மக்களை துன்புறுத்துவதையே சட்டபூர்வமானதாக்கி மோசமான சாதனைகளை படைத்த நாடு பாகிஸ்தான்.
அப்படி இருக்கும் பொழுது பொருளாதார முன்னேற்றமும் சமூக நீதியை அடைவதில் பெரும் முன்னேற்றமும் பெற்று வரும் இந்தியாவைப் பற்றி பாகிஸ்தான் கருத்து தெரிவிப்பது கேலிக்கூத்து மட்டுமல்லாமல் விபரீதமானது என்று பாகிஸ்தான் ஐநா சபையில் காஷ்மீர் விவகாரத்தை எடுத்த பொழுது இந்திய தூதர் அனுபமா சிங் கூறியுள்ளார்.
Source : Dinamalar