சச்சின் டெண்டுல்கரின் காஷ்மீர் பயணம் குறித்து பிரதமர் கருத்து.. என்ன கூறினார் தெரியுமா?..
By : Bharathi Latha
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் எப்பொழுதும் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் தான் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக தற்சார்பு இந்தியாவின் முக்கியமான நோக்கத்தை அடைய வேண்டும் என்றால் அதில் காஷ்மீர் பகுதிகளும் இணைய வேண்டும். இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் ஒன்று சேர்ந்தால் நாம் வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாபெரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மோடி அரசு நம்பிக்கை.
சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் காஷ்மீரில் சுற்றுலா சென்று இருக்கிறார் அந்த சுற்றுலா புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் தமது காஷ்மீர் பயணம் குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:"இதைப் பார்க்க இனிமையாக இருக்கிறது! சச்சின் தெண்டுல்கரின் அழகான ஜம்மு காஷ்மீர் பயணம் நமது இளைஞர்களுக்கு இரண்டு முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்துகிறது: ஒன்று – வியக்கத்தக்க இந்தியாவின் (#IncredibleIndia) பல்வேறு பகுதிகளை அறிந்துகொள்வது. இரண்டு- இந்தியாவில் உற்பத்தி செய்வதன் முக்கியத்துவம். அனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவோம்!” என கூறி உள்ளார்.
Input & image courtesy: News