Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் மத்திய அரசு.. புது முயற்சி..

இந்தியாவின் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் மத்திய அரசு.. புது முயற்சி..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 March 2024 12:50 PM GMT

உள்நாட்டு பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெஃப்கனெக்ட் 2024 ஐ தொடங்கி வைத்தார். உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்புகளை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் இயங்கும் உயர் சிறப்பு பாதுகாப்பு கண்டுபிடிப்பு அமைப்பு, இன்று புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் டெஃப்கனெக்ட் 2024 என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.


டெஃப்கனெக்ட் 2024 (DefConnect 2024) ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் தொழில்துறை வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனத்தினர், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவினரை ஒருங்கிணைக்கிறது. இந்த நிகழ்வு ஒத்துழைப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவை வளர்ப்பதற்கான ஒரு தளமாக இது அமையும். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் முன்னணி தொழில்களைச் சேர்ந்த ஏராளமான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.


ஐடெக்ஸ் (iDEX) இதுவரை, 10 சுற்று டிஃபென்ஸ் இந்தியா ஸ்டார்ட்-அப் சேலஞ்ச் (டிஸ்க்) மற்றும் 11 சுற்று ஓபன் சேலஞ்ச் (ஓசி) ஆகியவற்றை நடத்தியுள்ளது. முப்படைகள், பாதுகாப்பு விண்வெளி அமைப்புகள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், இந்திய கடலோர காவல்படை, எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் பிற அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்ய புதுமைக் கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதில் இது செயலாற்றுகிறது. 2018 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஐடெக்ஸ், அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் பல்வேறு தரப்பினருக்கு ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News