பாஜகவிற்கு நன்கொடை அளித்த பிரதமர்!

By : Sushmitha
அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கு ஆயுதமாகி வருகிற நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த விறுவிறுப்பான பேச்சுவார்த்தைகளிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. மேலும் நேற்று முன்தினம் பாஜக 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சிக்கு ரூபாய் 2000 நன்கொடையை வழங்கியுள்ளார் அது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பாரதிய ஜனதா கட்சிக்கு பங்களிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் விக்சித் பாரதத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளை வலுப்படுத்துகிறேன்.
நாமோ செயலி மூலம் தேசத்தின் வளர்ச்சிக்காக நன்கொடைக்கு ஒரு பகுதியாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
Source : Dinamalar
