Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரமடையும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம்! சலீமை கட்சியிலிருந்து நீக்கிய திருமாவளவன்!

தீவிரமடையும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம்! சலீமை கட்சியிலிருந்து நீக்கிய திருமாவளவன்!

SushmithaBy : Sushmitha

  |  5 March 2024 12:21 PM GMT

திமுகவின் நிர்வாகியாகவும் சினிமா துறையில் அதிக செல்வாக்கையும் பெற்ற தயாரிப்பாளராகவும் இருந்து வந்த சர்வதேச போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக உள்ள ஜாபர் சாதிக்கை தேடும் பணியில் டெல்லி மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். ஜாபர் சாதிக் குறித்த செய்திகள் இணையங்களில் வெளியான பிறகு திமுக அவரை தனது கட்சியிலிருந்து முழுமையாக நீக்குவதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்பொழுது ஜாபர் சாதிக்குடன் இணைந்து தமிழகத்தில் செயற்கை போதை பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டபட்ட அவரது சகோதரர் சலீமை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விசிகவில் இருந்து நீக்கியுள்ளார்.

டெல்லியில் கைது செய்யப்பட்ட போதை கடத்தல் கும்பலுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஜாபர் சாதிக் மட்டும் போதை கடத்தலில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்பட்ட நிலையில் அவருடன் இணைந்து போதை கடத்தலில் ஈடுபட்டு வந்த சலீம் விசிக வின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளராக இருந்து வந்தார். போதை பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கை திமுக நீக்கிய போது கூட அவருடன் கூட்டு வைத்திருந்த சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட வில்லை,அதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்த கேள்விகளை முன்வைத்த பொழுது கூட திருமாவளவன் அவரது பெயர் எப்ஐஆரில் இல்லை என்ற வகையிலே பதில் அளித்தார். ஆனால் தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் .இது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Source : The Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News