இந்திய மாணவர்களை சர்வதேச அளவில் மிளிர வைக்கும் மோடி அரசு.. புதிய திட்டம்..
By : Bharathi Latha
எதிர்கால தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகளுக்கான அணுகலை ஜனநாயகப்படுத்துவதற்காக அடல் புதுமை இயக்கம், நித்தி ஆயோக், மெட்டா ஆகியவை இணைந்து பள்ளிகளில் ஃபிரண்டியர் தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைக்கின்றன. எதிர்காலத் தொழில்நுட்பங்களை ஜனநாயகப்படுத்துதல், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்காக இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் முயற்சியாக, அடல் புதுமை இயக்கம், நித்தி ஆயோக், மெட்டா ஆகியவை ஃபிரண்டியர் தொழில்நுட்ப ஆய்வகங்களைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
அடல் புதுமை இயக்கம், மெட்டா ஆகியவை உத்தி சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிகளில் நாடு முழுவதும் உள்ள மாறுபட்ட பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் ஃபிரண்டியர் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும், ஈடுபடுவதற்கும் சம வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்யும்.
நாடு முழுவதும் 722 மாவட்டங்களில் இதுவரை 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை அடல் புதுமை இயக்கம் ஏற்படுத்தியுள்ளது. ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் கற்பனையை வளர்த்தல், வடிவமைப்பு, கணக்கீட்டு சிந்தனை, நேரடியாக கணக்கிடுதல் போன்ற திறன்களை இளம் வயதினரிடம் உருவாக்குவதை அடல் டிங்கரிங் ஆய்வகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Input & Image courtesy: News