போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், பாஜக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் அறிவிப்பு!

By : Sushmitha
டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் வழக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சில சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து பாஜக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் இன்று மாலை செங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ பங்கேற்க உள்ளார். மேலும் நாளை சென்னையின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வினோத் பி. செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் தமிழக முழுவதும் இது போன்று திமுக அரசை கடித்து பாஜகவினர் வருகின்ற நாட்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
Source : The Hindu Tamil thisai
