உலகளவில் ஆயுத இறக்குமதியில் முதலிடம் பெறும் இந்தியா!
By : Sushmitha
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் உலகில் உள்ள நாடுகள் ராணுவ தளவாட இறக்குமதி குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, ராணுவ தளவாடை இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதாக தெரிவித்துள்ளது.
அதாவது உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு என்பது 9.8 சதவீதமாக உள்ளதாகவும், இந்தியாவிற்கு அடுத்து உலகளாவிய ஆயுத இறக்குமதி பட்டியலில் இரண்டாம் இடத்தில் சவுதி அரேபியா 8.4 சதவீதத்தை பெற்று உள்ளது.
மேலும் இதற்கு அடுத்தடுத்த இடங்களில் கத்தார் 7.6%, உக்ரைன் 4.9%, பாகிஸ்தான் 4.3%, என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அது மட்டும் இன்றி கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் இறக்குமதி உலக மொத்த ஆயுத விற்பனையில் 11% ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
Source : The Hindu Tamil thisai