Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் எதிரி திமுக! கன்னியாகுமரியில் பிரதமர்!

தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் எதிரி திமுக! கன்னியாகுமரியில் பிரதமர்!

SushmithaBy : Sushmitha

  |  15 March 2024 10:20 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ளார். அதன்படி இன்று பிற்பகல் கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாடி உள்ளார்.

முதலில் சகோதர சகோதரிகளே என்று தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பேச ஆரம்பித்தத உடன் மக்கள் அனைவரும் கரகோசத்திலும் உற்சாகத்திலும் துள்ளிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



மேலும் மக்களை கொள்ளையடிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள், ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவின் அலை தான் வீசுகிறது.

இண்டி கூட்டணி 2ஜி உள்ளிட்ட ஊழல்கள் நிறைந்த கூட்டணியாகும், இண்டி கூட்டணி ஊழல் செய்வதற்காகவே போராடுகிறது. திமுக காங்கிரசால் தமிழகத்தில் எந்தவித வளர்ச்சியையும் முன்னெடுக்கவே முடியாது.

பாஜக 5ஜி போன்ற திட்டங்களை மக்களுக்கு கொடுக்கிறது அதோடு பாஜகவின் பெயரில் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் உள்ளது. தமிழ் பண்பாட்டின் எதிரியாக திமுக உள்ளது மேலும் திமுக நமது கடந்த கால பெருமைகளையும் பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கிறது!

பாஜக வ.உ.சி துறைமுகத்தை புதுப்பித்தது அதனால் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திமுக - காங்கிரஸ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது ஆனால் பாஜக அதனை நீக்கியது என்று பேசியுள்ளார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News