டிரக் உதயநிதி என்று நாங்கள் அழைக்கலாமா! கோவையில் வானதி சீனிவாசன் விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகத்தில் கோவையில் வாகன பேரணியில் ஈடுபட உள்ளதால் கோவை மாநகரின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை சித்தா புதூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவையில் பிரதமர் மோடியின் வருகைக்கு கட்சியினர் மட்டுமின்றி மக்களும் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அதற்கேற்ற வகையில் பிரதமரின் ரோட் சோ பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை சாய்பாபா காலனி பகுதியில் மாலை 5:30 மணிக்கு தொடங்கும் இந்த பேரணி மூன்று கிலோ மீட்டரை கடந்து ஆர் எஸ் புரம் பகுதியில் நிறைவடைய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை நுழைவு சீட்டுகளும் தேவையில்லை, இதில் பங்கேற்பவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக அந்த பகுதிகளுக்கு வர வேண்டும் என்று கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை கூட காங்கிரஸ் மற்றும் திமுக விமர்சனம் செய்கிறது, இப்படி தேர்தல் ஆணையத்தின் மீது அவர்கள் பழி போடுவதன் மூலம் தேர்தலுக்கு முன்பாகவே அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவே நாங்கள் பார்க்கிறோம்! 25 பைசா என பிரதமர் மோடியை அழைக்க வேண்டும் என்று உதயநிதி கூறுகிறாரே ஜாபர் சாதிக் கூட தொடர்பில் இருந்த உதயநிதியை டிரக் உதயநிதி என்று நாங்கள் அழைக்கலாமா என்றும் விமர்சித்துள்ளார்.
Source : The Hindu Tamil thisai