Kathir News
Begin typing your search above and press return to search.

புலனாய்வு அமைப்பு ஊழல் செய்தவர்களை விடவே விடாது! அமலாக்க துறையை பாராட்டி பேசிய பிரதமர்!

புலனாய்வு அமைப்பு ஊழல் செய்தவர்களை விடவே விடாது! அமலாக்க துறையை பாராட்டி பேசிய பிரதமர்!

SushmithaBy : Sushmitha

  |  17 March 2024 4:05 PM GMT

ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஊழலுக்கு எதிராக அமலாகத் துறையின் நடவடிக்கைகளை பாராட்டி பேசியுள்ளார்.

அதாவது, எந்த ஒரு சலுகையையும் ஊழலுக்கு எதிரான விஷயங்களில் காட்டக்கூடாது என்பதே எங்கள் அரசின் புதிய அம்சமாகும், அதனால் அனைத்து புலனாய்வு அமைப்புகளுக்கு ஊழலுக்கு எதிராக செயல்படுவதற்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு புலனாய்வு அமைப்புகள் சரியாக செயல்படாமல் இருந்தது, அதற்கு எடுத்துக்காட்டாக அமலாக்கத்துறை 2014 வரை 1800 வழக்குகள் மட்டுமே பதிவு செய்திருந்தது. ஆனால் 2014 க்கு பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் 4700 வழக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் 2014 வரை 5000 கோடி ரூபாய் வரையிலான சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதுவே கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல வழிகளில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பவர்களையும், போதை குற்றங்கள் செய்பவர்களையும் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது, இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கையால் சிலருக்கு பிரச்சனைகள் எழுந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் ஊழல் செய்தவர்களை புலனாய்வு அமைப்பு விடவே விடாது என்று அமலாக்க துறையை பாராட்டி பேசினார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News