பொன்முடிக்கு பதவி பிரமாணம் இல்லை! முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஆளுநர்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றிருந்தார். இதனால் அவரது அமைச்சர் பதவியும் எம்எல்ஏ பதவியும் பறிக்கப்பட்டது. இதனை அடுத்து பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்,
இதனால் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது மேலும் அவர் மீண்டும் எம்எல்ஏவாக தொடர ஆரம்பித்தார். இதனை அடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து அவருக்கு பதவி பிரமாணம் செய்ய பரிந்துரை செய்து ஆளுநர் ஆர். என். ரவிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் முதல்வருக்கு கவர்னர் பதில் கடிதம் எழுதியுள்ளார் அதில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தற்பொழுது தண்டனையை தான் நிறுத்தி வைத்துள்ளது ஆனால் அவர் குற்றவாளி இல்லை என்று கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Source : Dinamalar