பிரதமருக்கு ஆதரவாக திரும்பிய பிராமணர்கள்! மீண்டும் தாமரை மலர தீர்மானம் நிறைவேற்றம்!
By : Sushmitha
சேலம் மரவனேரி ஶ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில நிர்வாக குழுவின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
மேலும் செயலாளர் ஆடிட்டர் சங்கர ராமநாதன் என கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதோடு இந்த கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பாதுகாப்பையும் வளர்ச்சியும் கருத்தில் கொண்டு மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக பதவி ஏற்க செய்திட தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் தேசிய கண்ணோட்டத்தில் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Source : The Hindu Tamil thisai