பயண நேர குறைப்பால் வரவேற்பை பெற்ற கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்!
By : Sushmitha
கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியில் கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் கோவையில் இருந்து காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு 1.40 மணிக்கு மணிக்கு அங்கிருந்து புறப்படும் வகையிலும் கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த வந்தே பாரத் ரயிலின் பயண நேரமானது 6:30 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இதனை கோவையில் இருந்து வந்தே பாரத் ரயில் காலை 6:10 மணிக்கு புறப்பட்டு மறு மார்க்கமாக பெங்களூரில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்படும் வகையிலும் பயண நேரத்தை 5:40 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்றும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து கடந்த மார்ச் 11 இல் இருந்து இந்த ரயிலின் பயண அட்டவணையானது மாற்றியமைக்கப்பட்டு புதிய அட்டவணையின் படி காலை 7:25 மணிக்கு கோவையில் வந்தே பாரத் ரயில் புறப்பட்டு மறு மார்க்கமாக பெங்களூருவில் இருந்து 2:20 மணிக்கு வந்தே பாரத் கிளம்புகிறதாக அறிவிப்புகள் வெளியானது.
இதன் மூலம் கோவை - பெங்களூரில் இடையே இயக்கப்பட்டு வந்த பாரத் ரயில் 48 நிமிடங்களுக்கு முன்பாகவே சென்று வந்தது. இப்படி பயண நேரம் குறைக்கப்பட்டதால் வந்தே பாரத் ரயிலுக்கு அதிக புக்கிங் செய்யபடுகிறது. ரயிலின் மொத்த இருக்கைகளும் புக் ஆகியுள்ளதாம், அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களிலும் கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் அவர்களுக்கு வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Source : Dinamalar