Kathir News
Begin typing your search above and press return to search.

கட்சிக்காக உழைத்து இறந்த ஆடிட்டர் ரமேஷ்சை நினைவுகூர்ந்து கண்கலங்கிய பிரதமர்!

கட்சிக்காக உழைத்து இறந்த ஆடிட்டர் ரமேஷ்சை  நினைவுகூர்ந்து கண்கலங்கிய பிரதமர்!

SushmithaBy : Sushmitha

  |  19 March 2024 11:24 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று சேலத்தில் நடைபெறுகின்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்பொழுது, பாரத அன்னை வாழ்க... என் அருமைத் தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம் என்று தமிழில் தனது பேச்சை தொடங்கிய பிரதமர் கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி!

தற்போது தமிழகத்தில் பாஜக விற்கும் எனக்கும் கிடைத்து வருகின்ற மிகப்பெரிய மக்களின் ஆதரவை இந்திய நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது ஒட்டு மொத்த நாடே இது குறித்து தான் பேசுகிறது, நேற்று கோயம்புத்தூர் மக்களின் வெள்ளத்தில் நீந்தி கொண்டே பயணித்தேன்! தமிழகத்தில் பாஜக விற்கும் தேசிய ஜனநாயக கட்சிக்கும் கிடைக்கும் ஆதரவு லோக்சபா தேர்தலில் நம்முடைய வெற்றி எண்ணிக்கை 400 ஐ தாண்டும் என்று கூறினார்.

மேலும், நான் பலமுறை சேலத்திற்கு வந்திருக்கிறேன் இந்த முறை நான் சேலத்திற்கு வரும் பொழுது எனக்கு என்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற பொழுது ஒரு பெரிய குழு என்னுடன் வந்திருந்தது. அந்தக் குழுவில் ஒரு இளைஞர் வந்திருந்தார், அவருடைய ஞாபகம் எனக்கு இப்பொழுது வருகிறது அவர் இந்த ஊரைச் சேர்ந்த ரத்னவேல்! அவருடன் பயணித்த காலத்தில் அவர் சேலத்தின் பெருமைகளை சிறப்புகளை என்னிடம் கூறிக் கொண்டே இருந்தார்... அவர் இங்கு ஒரு உணவகத்தை நடத்தி வந்தால் ஆனால் தற்போது அவர் நம்மிடம் இல்லை.

அதேபோல சேலம் ஆடிட்டர் ரமேஷின் நினைவும் எனக்கு வருகிறது கட்சிக்காக உழைத்து கட்சிக்காக உயிரையே தியாகம் செய்த மாபெரும் மனிதர் என்று பிரதமர் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது பிரதமர் வார்த்தைகள் தடுமாறி கண் கலங்கினார்! கட்சிக்காக உழைத்தவரை சமூக விரோதிகள் கொலை செய்து விட்டார்கள் அந்த நேர்மையாளரை இந்த நேரத்தில் இந்த மண்ணிலே நினைவுகூர்ந்து எனது இதயபூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன் என்று பேசினார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News