என் சகோதரரே முக்கிய மூளை! பேரிச்சம் பழத்தில் வைத்து போதைப் பொருள் விற்பனை செய்தோம் உண்மையைக் கக்கிய ஜாபர்!

By : Sushmitha
திமுக அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும் சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதி சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக உலக அளவில் போதைப்பொருட்களை கடத்தலில் ஈடுபட்டுள்ளதை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து அவரை கைது செய்து 10 நாட்களாக காவல் எடுத்து விசாரணை செய்து வந்தது.
சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக் உட்படுத்தப்பட்ட ஜாபர் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் டெல்லி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜாஃபர் சாதிக் சில முக்கிய தகவல்களை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது, என்னை விட என் சகோதரர் முகமது சலீம் தான் வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தியதில் முக்கிய மூளையாக செயல்பட்டு வந்தார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா என வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தையும் அவரே கவனித்து வந்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக இருந்த அவருக்கு தமிழகத்தில் உள்ள போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது, அதன் மூலம் சென்னை அண்ணா நகரில் போதை கடத்தல் செய்பவர்களுடன் என் தம்பிக்கு தொடர்பு உள்ளது மற்றொரு சகோதரர் மைதீன் சினிமாவில் நடித்து வருகிறார் அவர் மூலம் கோலிவுட்டில் போதை புழக்கத்தை ஏற்படுத்தினோம்!
சில நடிகர், நடிகைகள், கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் என எங்களது வாடிக்கையாளர்களுக்கு பேரிச்சம் பழத்தில் வைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்தோம் என ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar
