மூளை அறுவை சிகிச்சை..... நலமுடன் இருக்கிறேன் வீடியோ வெளியிட்ட சத்குரு! நலம் விசாரித்த பிரதமர்!

கோவை ஈஷா மையத்தின் நிறுவனராக உள்ள சத்குரு கடந்த நான்கு வாரமாகவே கடும் தலைவலியில் இருந்து வந்துள்ளார். இருப்பினும் மகா சிவராத்திரி மற்றும் டெல்லியில் நடைபெற்ற மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்று தனது ஆன்மீக முக்கிய தினங்களில் முழுமையாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்குரு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோவை அறுவை சிகிச்சை முடிந்த பிறகு சத்குருவே வெளியிட்டுள்ளார்.
அதில், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது இருப்பினும் நலமுடன் இருக்கிறேன் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் சத்குருவிற்கு அழைப்பு விடுத்து விரைவில் நலம் பெற வேண்டுமென்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து, சத்குருஜியிடம் பேசி, அவர் நல்ல ஆரோக்கியம் மற்றும் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளதாக பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Source : Malai malar