Kathir News
Begin typing your search above and press return to search.

மாலத்தீவு கடனை அடைக்க இந்தியா நிவாரணம் அளிக்க வேண்டும்! மாலத்தீவு அதிபர் கோரிக்கை!

மாலத்தீவு கடனை அடைக்க இந்தியா நிவாரணம் அளிக்க வேண்டும்! மாலத்தீவு அதிபர் கோரிக்கை!

SushmithaBy : Sushmitha

  |  23 March 2024 9:07 AM GMT

மாலத்தீவு அதிபர் மூயிஸ் இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு சில சலுகைகளை இந்தியாவிடம் கேட்டுள்ளார்.

அதாவது மாலத்தீவு அதிபராக மூயிஸ் பதவியேற்றதிலிருந்து சீன ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்த அவர் இந்தியா எதிர்ப்பு நிலையையும் கடைபிடித்து வந்தார். அதோடு மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டுமென்று அவர் கூறியதோடு அந்நாட்டு அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை குறித்து விமர்சித்தது இரு நாட்டிற்கும் இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.

அதோடு மாலத்தீவு அதிபர் கூறியது படியே இந்திய ராணுவம் தனது முதல் குழுவை தாயகம் அழைத்துக் கொண்டது எஞ்சியுள்ள வீரர்கள் மே பத்தாம் தேதிக்குள் தாயகம் திரும்புவார்கள் என்றும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.

இந்த நிலையில் அந்த நாட்டு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ள மாலத்தீவு அதிபர் இந்தியா மாலத்தீவுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்வதில் முக்கிய பங்கு வகுத்து வருகிறது, இந்தியா எங்களின் நெருங்கிய நட்பு நாடாக தொடர்ந்து இருக்கும் அதில் எந்த பிரச்சனையும் கிடையாது!

மேலும் மாலத்தீவு இந்தியாவிடம் இருந்து பெற்றுள்ள கடன் மாலத்தீவு பொருளாதாரத்தால் தாங்க முடியாததாக உள்ளது. அதனால் கடனை குறைத்தல் அல்லது கடனுக்கான வட்டி விகிதங்கள் அல்லது ஏதேனும் சலுகைகளை இந்தியா மாலத்தீவிற்கு வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசுடன் மாலத்தீவின் பொருளாதார நிலைக்கு ஏற்றபடி கடனை திருப்பிச் செலுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News