Kathir News
Begin typing your search above and press return to search.

துணிச்சலின் தலைநகரம் லடாக்... ராணுவ வீரர்கள் உடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

துணிச்சலின் தலைநகரம் லடாக்... ராணுவ வீரர்கள் உடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

SushmithaBy : Sushmitha

  |  25 March 2024 8:06 AM GMT

கோலாகலமாக வண்ணங்களை பூசி ஆடல் பாடலுடன் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் தெருவில் இறங்கி தனது ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தனது ஹோலி பண்டிகையை உலகின் உயரமான போர்க்களமான லடாக் யூனியன் பிரதேசத்தில் சியாச்சின் பனிமலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடன் நேற்று திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் மோசமான வானிலை நிலவியதால் அமைச்சர் தனது பயணத்தை மாற்றி லேப் பகுதிக்கு சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.


அதற்குப் பிறகு ராணுவ வீரர்களுடன் உரையாடிய மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங், லடாக் நிலப் பகுதியானது ஒரு சாதாரணமானது அல்ல! நமது அரசியலின் தலைநகரமாக டெல்லி உள்ளது, மேலும் பொருளாதாரத்தின் தலைநகரம் மும்பை, தொழில்நுட்பத்தின் தலைநகரம் பெங்களூர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்! அதேபோன்று லடாக் என்பது துணிச்சலின் தலைநகரம் என்றும் வலிமையின் தலைநகரம் என்றும் புகழாரம் சூட்டினார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News