Kathir News
Begin typing your search above and press return to search.

தூத்துக்குடி முத்து, நீலகிரி டீ தூள் போன்ற உள்ளூர் பொருட்களை....பில்கேட்ஸ்க்கு பிரதமர் பரிசாக வழங்கினார்.

தூத்துக்குடி முத்து, நீலகிரி டீ தூள் போன்ற உள்ளூர் பொருட்களை....பில்கேட்ஸ்க்கு பிரதமர் பரிசாக வழங்கினார்.

SushmithaBy : Sushmitha

  |  29 March 2024 11:17 AM GMT

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் இணை நிருவனருமான பில்கேட்ஸ்ஸை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் சுற்றுச்சூழல் பருவ கால மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

இதில், அனைத்து துறைகளிலும் இந்தியா வெகு வேகமாக வளர்ந்து வருகிறது, இன்றைய இளைஞர்களையும் பெண்களையும் டிஜிட்டல் முறை கவர்ந்து இருக்கிறது. தமிழகம் மற்றும் காசியில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகுகள் இயங்க துவங்கியுள்ளது. ஏ ஐ தொழில்நுட்பமும் பலவகையில் பயன்படுகிறது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு நமோ ஆப்பில் அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் ஒளிபரப்புகள் செய்யப்படுகிறது என்று பிரதமர் பேசினார்.

மேலும், பொதுமக்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து உரிய பயிற்சிகள் அளிக்கா விட்டால் அது தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோகளில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று வெளிப்படையாக தெரியும் வகையிலான வாட்டர் மார்க் இருக்க வேண்டும் என ஆலோசனைகளை முன் வைத்தார்.

இதனை அடுத்து இறுதியில், தமிழகத்தின் தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து எடுத்த முத்து, களிமண்ணால் உருவான மண்குதிரைகள், டார்ஜிலிங் மற்றும் நீலகிரியில் உருவான டீ தூள்களையும் பிரதமர் மோடி பில்கேட்ஸுக்கு பரிசாக வழங்கினார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News