Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவின் வாக்குறுதியை நம்புவது பாலங்கிணற்றில் விழுவதற்கு சமமாகும் - சீர்மரபினர் நல சங்கம்!

திமுகவின் வாக்குறுதியை நம்புவது பாலங்கிணற்றில் விழுவதற்கு சமமாகும் - சீர்மரபினர் நல சங்கம்!

SushmithaBy : Sushmitha

  |  2 April 2024 1:26 PM GMT

68 சீர்மரபினர் சமுதாய மக்களுக்கு எந்த அரசாணை பிறப்பிக்காமல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று திமுக கூறுகிறது இதற்கு வரும் தேர்தலில் திமுக அதன் பலனை காணும் என தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது கடந்த 27ஆம் தேதி அன்று முதல்வர் மு க ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் சீர் மரபினருக்கு வழங்கப்படும் ரெட்டை சான்று முறையை ஒழித்து ஒரே சான்று வழங்க உத்தரவிட்ட பிறகு தான் உங்கள் முன்பு துணிச்சலோடு வந்துள்ளேன் என்று கூறினார். இருப்பினும் இது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கடந்த மாதம் 29ஆம் தேதி நாளிதழிலே வெளியானது.

இதற்கு அடுத்தபடியாகவே 2019 அரசாணையை திருத்தாமல் அந்த ஆணையின்படி டிஎன்சி, டிஎன்டி என்ற இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக இரண்டையும் ஒரே சான்றிதழாக வழங்கும் வகையில் டிஎன்சி - டிஎன்டி என ஒரே சான்றிதழாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக துறைச் செயலாளரால் அனுப்பப்பட்ட ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதுமட்டுமின்றி டி என் சி மற்றும் டி என் டி என தனித்தனியாக இரண்டு தாள்களில் இக்கடிதம் வழங்குவதற்கு பதிலாக இரண்டு சான்றையும் ஒரே தாளில் வழங்கும்படி கூறியுள்ளது, அதனால் இது தெளிவுரை அல்ல குழப்ப உரையே மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் கூறிய வாக்குறுதிக்கும் இது எதிரானது.

மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் கடந்த மாதம் ஒன்பதாம் தேதியில் அரசாணை பிறப்பித்த திமுக 68 சமூக மக்களுக்கு எந்த அரசாணை பிறப்பிக்காமல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறது. இது வருகின்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் திமுகவின் வாக்குறுதியை நம்புவது பாலங்கிணற்றில் வீழ்வதற்கு சமமாகும் என்றும் தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News