Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் இயல்பை விட அதிகமாக இருக்கும் வெப்பநிலை.. காரணம் காலநிலை மாற்றமா..

இந்தியாவில் இயல்பை விட அதிகமாக இருக்கும் வெப்பநிலை.. காரணம் காலநிலை மாற்றமா..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 April 2024 5:17 PM GMT

இந்திய வானிலை ஆய்வுத் துறை 2024 ஏப்ரல் மாதத்திற்கான மழைப் பொழிவு, வெப்பநிலை மற்றும் வரும் கோடைப் பருவத்தில், (ஏப்ரல் முதல் ஜூன் வரை) நிலவும் வெப்பநிலை ஆகியவை குறித்த அறிக்கையை புதுதில்லியில் உள்ள பிரித்வி பவனில் இன்று வெளியிட்டது. பிரித்வி பவனின் மஹிகா ஹாலில் மெய்நிகர் வடிவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்திய வானிலைத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைகாலத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட, அதிகமாக வெப்பநிலை இருக்கும் என்று கூறினார். குறிப்பாக மத்திய இந்தியா மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியாவில் அதிக வெப்பநிலை நிலவும் என்று அவர் தெரிவித்தார்.




இந்த வெப்பமான காலநிலையில் மேற்கு இமயமலை பிராந்தியம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிடக் குறைவாக இருக்கும் என்று அவர் கூறினார். 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வெப்பநிலை குறித்த முக்கிய அம்சங்கள் வருமாறு: இந்தக் காலகட்டத்தில், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக வெப்பநிலை காணப்படும்.


இப்பருவத்தின் போது, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பாகவும், அதைவிட அதிகமாகவும் இருக்கும். 2024 ஏப்ரல் மாதத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும். இருப்பினும், கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில குறிப்பிட்டப் பகுதிகளில் இயல்புக்கு குறைவாக வெப்பநிலை இருக்கும். 2024 ஏப்ரல் மாதத்தில் இயல்பான குறைந்தபட்ச வெப்பநிலை வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மாதாந்திர குறைந்தபட்ச வெப்பநிலை அதிகமாக இருக்கும்.


ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், தெற்கு தீபகற்பம், மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இயல்பை விட வெப்ப அலை அதிகமாக இருக்கும். 2024 ஏப்ரலில், தெற்கு தீபகற்பம் மற்றும் அருகிலுள்ள வடமேற்கு மத்திய இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இயல்பான வெப்ப அலை நிலவும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News