Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் திமுக மற்றும் காங்கிரஸ்! பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா..!

தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் திமுக மற்றும் காங்கிரஸ்! பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா..!

SushmithaBy : Sushmitha

  |  7 April 2024 8:18 AM GMT

இன்று தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு திமுகவும் காங்கிரசும் எப்பொழுதுமே எதிரானது தமிழ் இலக்கிய மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது, ஆனால் தமிழர்களின் கலாச்சாரத்தை திமுக அழிக்க முயற்சி செய்து வருகிறது என்று பேசினார்.

மேலும், இன்று மாலை 5:30 மணி அளவில் திருச்சி தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனிற்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க உள்ளார். அதோடு திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணியிலும் பங்கேற்க உள்ளார். முன்னதாக அப்பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்செரித்தல் விழா நடைபெற உள்ளதால் வாகன பேரணி நடத்தக்கூடாது என்று போலீசார் அனுமதி மறுத்திருந்தனர், இதனை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வாகன பேரணிக்கு அனுமதி கோரி பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News