Kathir News
Begin typing your search above and press return to search.

மேட்டுப்பாளையம் பிரச்சாரத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தமிழில் கூறி மகிழ்ச்சி அடைந்த பிரதமர்..!

மேட்டுப்பாளையம் பிரச்சாரத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தமிழில் கூறி மகிழ்ச்சி அடைந்த பிரதமர்..!
X

SushmithaBy : Sushmitha

  |  10 April 2024 7:15 PM IST

நான்கு நாள் பயணமாக தமிழகம் வருகை புரிந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி எனது அன்பான தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம் என்று தமிழில் தனது உரையை ஆரம்பித்து, இந்தப் பகுதியில் உள்ள மருதமலை முருகன் மற்றும் கோனியம்மனை வணங்குகிறேன், கோவையின் ஆற்றலும் நீலகிரியின் அழகும் மேட்டுப்பாளையத்திற்கு பொருந்தி இருக்கிறது. இவ்வளவு தேயிலை தோட்டங்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு ஒரு டீ கடைக்காரர் வந்தால் மகிழ்ச்சி இருக்காதா என்ன? என்று பேசிய பிரதமர் விரைவில் வரவுள்ள தமிழ் புத்தாண்டு நினைவுகூர்ந்து தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவின் அலை வீசுகிறது திமுகவிற்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். அதனால்தான் நாம் கூறுகிறோம் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று!. திமுக மற்றும் காங்கிரஸின் அடிப்படை எண்ணமே கோடிக்கணக்கான பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் கிடைத்து விடக்கூடாது என்பதே.. ஆனால் மத்தியில் பாஜக அரசு பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகளை வழங்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News