தமிழகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பிரச்சாரம்..

By : Sushmitha
தமிழகத்தில் முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கும் பிரச்சாரத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள கடந்த சில நாட்களாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், அக்கட்சி தேசிய தலைவர் நட்டா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை புரிந்தனர் இதன் தொடர்ச்சியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தமிழகம் வருகை தர உள்ளார்.
தமிழகம் வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, சிதம்பரம்,. தஞ்சாவூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். மேலும் பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோ போன்றவற்றின் மூலமும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
Source : Dinamalar
