மோடியின் கேரண்டி...பட்டியலிட்ட அண்ணாமலை..!

By : Sushmitha
கோபாலபுரத்தில் ஊழல் குடும்பத்தினர் சிறையில் இருப்பார்கள் என மோடி கேரண்டி தருவார்!
கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கோவை தொகுதி பாஜக வேட்பாளரும் பாஜகவின் மாநிலத் தலைவருமான அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் தரப்பில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கேரண்டி கேட்கிறார் என கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு கோபாலபுரத்தின் ஊழல் குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மோடி கேரண்டி தருவார், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களும் திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற தீய சக்தியிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், தமிழ்நாட்டை டாஸ்மார்க் டி.ஆர். பாலுனுடைய சாராய ஆலையிலிருந்து காப்பாற்ற கேரண்டி கொடுப்பார்.
மோடி என்ன கேரண்டி கொடுப்பார் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சோசியல் மீடியா விளம்பரத்திற்கு மட்டும் ரூபாய் 7,39,93,750 செலவு செய்திருக்கிறார்கள். மேலும் இந்த பணத்தை பாப்புலஸ் என்பவர்மெண்ட் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன் இப்படி ஒரே குடும்பம் அனைத்தின் மீது ஆதிக்கத்தை செலுத்துவதை தடுப்பதற்கான கேரண்டியை பிரதமர் மோடி கொடுப்பார்..! என்று கூறியுள்ளார்.
Source : The Hindu Tamil thisai
