மாற்றத்திற்காகவே தேர்தலில் நிற்கிறேன்..அண்ணாமலை பேச்சு!

By : Sushmitha
இன்று கோவையில் நடைபெற்ற இந்தியன் தொழில் முனைவோர் கூட்டத்தில் கோயம்புத்தூரில் தேவைகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது அதில் கோவை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அதில், பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான திட்டத்தை வைத்துள்ளார். மேலும் தற்போது நான் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவில்லை ஒரு மாற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேன். அதுமட்டுமின்றி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒரு கோவை தொகுதியின் எம்பி ஆக மட்டும் நான் பாராளுமன்றத்திற்கு செல்ல போவதில்லை ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான தேவைகளை குறித்தும் பாராளுமன்றத்தில் பேசுவேன்! என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை தேர்தல் விதிகளை மீறி உள்ளதாக வழக்குப் பதியப்பட்டது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு 10 மணிக்கு மேல் நான் மைக்கை பிடித்து பேசும் வீடியோ இருந்தால் என்னிடம் காட்டுங்கள், பாஜகவினரை திமுகவினர்தான் தள்ளினர் அதனால்தான் கைகலப்பு ஏற்பட்டது தேர்தல் விதிமுறைகளை நான் மீறவில்லை தேர்தல் விதிமுறைகள் குறித்து எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
Source : Dinamalar
