Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரமடையும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் கட்ட பணிகள்...!

தீவிரமடையும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் கட்ட பணிகள்...!

SushmithaBy : Sushmitha

  |  13 April 2024 4:27 PM GMT

மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளில் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தீவிரமடைந்திருப்பது குறித்த புகைப்படங்களை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதாக அறிவிப்புகள் வெளியானதை அடுத்து 2019 ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இதனை அடுத்து மக்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் அனைத்தும் தற்போது தீவிரமடைந்து உள்ளது. அதாவது கடந்த மார்ச் 4ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தனியார் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டது. இதனை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருந்த இடத்தை சமன் செய்து வாஸ்து பூஜை நடைபெற்றது.


மேலும் 33 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 950 படுக்கைகளுடன் 10 தளங்களுடன் அமைய உள்ளது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளில் முதல் கட்டமாக 5 கி.மீ., சுற்றளவுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் 12 அடி உயர சுற்றுசுவர் மற்றும் 21 கோடி ரூபாய் மதிப்பில் 6 கி.மீ., சாலை பணிகள் நிறைவடைந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source : Dinamalar & Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News