Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவிற்கு எதிராக ஆடியோ வெளியிட்டதால் வேத வித்யா குருகுலத்தைச் சேர்ந்தவருக்கு நடந்த விபரீதம்..!

திமுகவிற்கு எதிராக ஆடியோ வெளியிட்டதால் வேத வித்யா குருகுலத்தைச் சேர்ந்தவருக்கு நடந்த விபரீதம்..!

SushmithaBy : Sushmitha

  |  15 April 2024 1:40 PM GMT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்து உள்ள காஞ்சேரியில் இருக்கும் ஸ்ரீ வேத வித்யா குருகுலத்தை சீதாராமன் என்பவர் நடத்தி வருகிறார். இதில் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் வேத பாடங்களை படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீதாராமன் இந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று பேசி ஆடியோ வெளியிட்டு இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு அடுத்தபடியாக நேற்று காலை சீதாராமன் காஞ்சேரியில் நடை பயிற்சி சென்ற பொழுது அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஒரு வீடியோ ஒன்றையும் சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

அதில், நான் வெளியிட்ட ஆடியோவிற்கு தகுந்த பலனை கொடுத்து விட்டார்கள், நான் நடை பயிற்சி சென்ற பொழுது இரண்டு பேர் என்னை அடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி ஒரு வாரம் வாயை பொத்திக் கொண்டு இரு என்று மிரட்டினார்கள், இப்படி அராஜகத்தோடும் திமிரோடும் ஒருவரை மிரட்டினால் அவர்கள் அடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறார்கள் ராட்சசர்கள் தான் இப்படி இருப்பார்கள் நாம் பயப்படக்கூடாது இந்த முறையும் அல்ல அடுத்த முறையும் அவர்கள் தேர்தலில் ஜெயித்து விடக்கூடாது, நிச்சயமாக இம்முறை திமுகவை தோற்கடித்து நேர்மையான ஆட்சி வரவேண்டும் அப்போதுதான் பொதுமக்களும் சாதுக்களும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் என்று பேசியுள்ளார். இப்படி சீதாராமன் பேசி உள்ள வீடியோ தற்போது இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News