அயோத்தி ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய திலகம்..பரவசத்தில் பக்தர்கள்..!
By : Sushmitha
இன்று கொண்டாடப்படும் விஷ்ணுவின் அவதாரமான ராமரின் பிறந்த நாளை குறிக்கும் பண்டிகை தான் ராமநவமி! இந்த ராம நவமியை முன்னிட்டு அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஒரு அற்புத செயல் ஒன்று நடந்துள்ளது.
அதாவது அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் ராமநவமி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில் பாலராமருக்கு சூரிய அபிஷேகம் அதாவது சூரிய திலகம் என்ற ஒரு அற்புத நிகழ்வு நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட இன்று மதியம் 12:00 மணி முதல் 12:05 மணி வரை சூரியனின் ஒளி கதிர்கள் ராமரின் நெற்றியில் ஒரு சூரிய திலகம் போல் விழுந்துள்ளது இந்த அரிய நிகழ்வை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.
இந்த அற்புத நிகழ்வை பிரதம நரேந்திர மோடி வீடியோவில் கண்டு பரவசமடைந்தார். மேலும், கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அயோத்தியில் பிரம்மாண்டமான ராம நவமி வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும், மேலும் இது நமது தேசத்தை பெருமையின் புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கட்டும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.